மொகாலி அருகே புற்றுநோய் மருத்துவ மையம்!

மொகாலி: பஞ்சாப் மாவட்டம் மொகாலி அருகே உள்ள முல்லான்பூர் என்னும் கிராமத்தில் இந்திய அரசு சார்பில் மாபெரும் புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்பட உள்ளது.
இன்று இதற்காக அடிக்கல் நாட்டிய பிரதமர் மன்மோகன்சிங் சிறப்புரையும் ஆற்றியுள்ளார்.
இந்த மருத்துவ மையத்தில் முதற்கட்டமாக 100 படுக்கை வசதிகள் செய்யப்படும் என்றும் படிப்படியாக வசதிகள் அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநில அரசு இதன் பொருட்டு சுமார் 50 ஏக்கர் நிலத்தை அளித்துள்ளது. பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து இந்திய அரசின் சுகாதாரத் துறை இதற்காக ரூ. 500 கோடி திட்ட நிதி ஒதுக்கியுள்ளது. மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துமனையின் மாதிரியில் இம்மருத்துவமனையும் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.​
மொகாலி அருகே புற்றுநோய் மருத்துவ மையம்! மொகாலி அருகே புற்றுநோய் மருத்துவ மையம்! Reviewed by நமதூர் செய்திகள் on 19:30:00 Rating: 5

No comments:

Powered by Blogger.