மதுரையில் நடைபெற்ற SDPI கட்சியின் தலைமைத்துவ பயிற்சி முகாம்!

மதுரையில் நடைபெற்ற SDPI கட்சியின் தலைமைத்துவ பயிற்சி முகாம்!


madurai leaders camp

SDPI கட்சியின் தலைமைத்துவ பயிற்சி முகாம் நேற்று (28.12.2013) மதுரையில் நடைபெற்றது.
மதுரை பத்மா சூர்யா மஹாலில் நடைபெற்ற தலைமைத்துவ பயிற்சி முகாமிற்கு கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கோவை அபுதாகிர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொது செயலாளர்கள் அப்துல் ஹமீது, நிஜாம் முஹைதீன், மாநில செயலாளர்கள் அப்துல் சத்தார், நாஞ்சில் செய்யதலி, அமீர் ஹம்சா, ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, மாநில துணை தலைவர் எஸ்.எம்.ரபீக் அஹமது, மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக் ஆகியோர் தலைமைத்துவம் பற்றிய வகுப்புகளை நடத்தி உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தேசிய தலைவர் சயீது அவர்கள் எதிர்கால அரசியல் சூழ்நிலை குறித்தும், தலைமைத்துவம் குறித்தும் சிறப்புரையாற்றினார். இறுதியில் மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
leaders camp madurai 2 3456
மதுரையில் நடைபெற்ற SDPI கட்சியின் தலைமைத்துவ பயிற்சி முகாம்! மதுரையில் நடைபெற்ற SDPI கட்சியின் தலைமைத்துவ பயிற்சி முகாம்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:01:00 Rating: 5

No comments:

Powered by Blogger.