மோடியின் பயங்கரவாத ஆட்சியில் சமூக ஆர்வலர்களுக்கு இடமில்லை!

குஜராத்தின் கிர் காடுகளில் நடக்கும் சட்டவிரோத சுரங்கக் கொள்ளையை அம்பலப்படுத்திய தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) ஆர்வலரான அமித் ஜெத்வா, கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமித் ஜெத்வா
அமித் ஜெத்வா
இக்கொலையின் பின்னணியில், ஜுனாகத் தொகுதியின் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான தினு சோலங்கிக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவரை மோடி அரசு பாதுகாப்பதாகவும் அமித் ஜெத்வாவின் தந்தை பிகாபா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், போலீசின் போலி விசாரணையில், சோலங்கிக்கு இதில் எவ்விதத் தொடர்புமில்லை என்ற நற்சான்றிதழ் வழங்கப்பட்டதால், இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென, குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிகாபா வழக்கு தொடர்ந்தார்.
இறுதியில், இப்படுகொலையில் சோலங்கிக்கு இருந்த நெருங்கிய உறவு அம்பலமானதால், சி.பி.ஐ, அவரைக் கடந்த மாதம் கைது செய்துள்ளது. மேலும் சோலங்கியின் மருமகன் ஷிவ் சோலாங்கி மற்றும் குறி தவறாமல் சுடுவதில் நிபுணரான சைலேஷ் பாண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்செய்தி வகை மாதிரிக்கு ஒரு உதாரணம் மட்டுமே. கடந்த ஐந்தாண்டுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் தாக்கப்படுவதிலும் கொல்லப்படுவதிலும் நாட்டிலேயே முன்னணியில் திகழும் மாநிலமாக பயங்கரவாத மோடி ஆளும் குஜராத் முன்னேறியிருக்கிறது.
மோடியின் பயங்கரவாத ஆட்சியில் சமூக ஆர்வலர்களுக்கு இடமில்லை! மோடியின் பயங்கரவாத ஆட்சியில் சமூக ஆர்வலர்களுக்கு இடமில்லை! Reviewed by நமதூர் செய்திகள் on 21:54:00 Rating: 5

No comments:

Powered by Blogger.