பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்கலாம்-ஆட்சியர் தரேஸ் அஹமது !

அரசுத் திட்டங்களை செயல்படுத்த, பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில்,  பொதுமக்களுக்கான அனைத்து  நலத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பணியாற்றுவது அரசு அலுவலர்களின் கடமையாகும். அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் லஞ்சம் கேட்போர் மீது எவ்வித அச்சமின்றி புகார் அளிக்கலாம்.
அனைத்துத் துறை அரசு அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரது செல்போன் எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
லஞ்சம் கொடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றிவிடலாம் என நினைப்பது முறையான செயல் அல்ல.
எனவே, பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்கள் பற்றிய தகவல்களை மாவட்ட ஆட்சியர் 9444175000, ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளர் 9445048952, 9445048862 அல்லது அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
மேலும், பொதுமக்கள் அறிந்துகொள்ள வசதியாக, மேற்குறிப்பிட்ட எண்கள் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் எழுதப்பட்டிருக்கும் என்றார் அவர்.
பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்கலாம்-ஆட்சியர் தரேஸ் அஹமது ! பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்கலாம்-ஆட்சியர் தரேஸ் அஹமது ! Reviewed by நமதூர் செய்திகள் on 23:57:00 Rating: 5

No comments:

Powered by Blogger.