மாவட்ட நிர்வாக தலைமையகத்தில் நுழைந்து தங்குவர்: அரசுக்கு எச்சரிக்கை!

உத்தரபிரதேசம்: முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் செய்யவில்லையேல்
மாவட்ட நிர்வாகத்தின் அலுவலகத்தினுள் நுழைந்து அங்கு அவர்கள் தங்குவர் என எஸ்.டி.பி.ஐ கட்சி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைமையில் உ.பி மாநிலம் ஷாம்ளி மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இம்மாவட்டத்தில்தான், முஸஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பெருவாரியாக தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடும் குளிர் மூலம் குழந்தைகள் மரணித்த மாலிக்பூர் முகாம் உள்பட பல்வேறு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் இந்தத் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஷஹாபுத்தீன் (உ.பி) தர்ணாவைத் துவக்கி வைத்தார்.
அவர் தனது உரையில், "இந்தத் தர்ணா ஒரு அடையாளப் போராட்டம் மட்டுமே. 3 தினங்களில் தெளிவான நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் குளிரில் கூடாரங்களில் தங்கியிருக்கும் அகதிகள் மாவட்ட நிர்வாகத்தின் தலைமையகத்தில் நுழைந்து தங்குவார்கள்" என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
உ.பி மாநில பொதுச் செயலாளர் மாஸ்டர் ஸாஹித், மாநில துணைத்தலைவர் டாக்டர் ஷரஃபுத்தீன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். முகாமிற்கு வந்து அகதிகளிடம் இருந்து மனுவை வாங்க ஆரம்பத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் மக்கள் கோபமடைந்தனர். பின்னர், மாவட்ட ஆட்சி தலைவர் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்து எஸ்.டி.பி.ஐ தலைவர்களிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்டார்.
மாவட்ட நிர்வாக தலைமையகத்தில் நுழைந்து தங்குவர்: அரசுக்கு எச்சரிக்கை! மாவட்ட நிர்வாக தலைமையகத்தில் நுழைந்து தங்குவர்: அரசுக்கு எச்சரிக்கை! Reviewed by நமதூர் செய்திகள் on 20:07:00 Rating: 5

No comments:

Powered by Blogger.