சுய முன்னேற்றம்-வேகமாகச் செல்வந்தர்கள் ஆவோம்.
1.செல்வம் என்பது பொருட்களைச் சேர்த்து வைத்திருப்பது அல்ல ,அது ஒரு மனோபாவம்,படைப்புச் சிந்தனை .ஒவ்வொரு மனிதனிடமும் பொதிந்துள்ள படைப்புச் சிந்தனை தான் செல்வம் ,சிந்தனையின் மூலம் உருவாக்கப்படும் பொருட்கள் அல்ல.மனித சமூகம் முழுவதும் எண்ணங்களால் கண்ணுக்குத் தெரியாத சங்கிலி மூலம் பிணைக்கப்பட்டுள்ளது.ஒருவர் செய்யும் சிந்தனை இந்த சங்கிலி மூலமாக ,ஒருவர் மாற்றி ஒருவர் என்று கடந்து அணைவரையும் சென்றடைகின்றது.மற்றவர்களது மன உணர்வுகளை,சிந்தனைகளை யார் இயற்கையின் சங்கிலி தொடர் எண்ணங்களின் தொடர் அனைவரையும் சென்று நிறைவு பெறா வண்ணம் பிடித்து வைத்திருக்கின்றார்களோ அவர்கள் தான் செல்வந்தர்கள் என்று தற்போதைய காலங்களில் நம்மால் உணரப்படுகின்றார்கள்.இந்த அளவு கோல் எப்போது எப்படி மாறும்?
2.செல்வம் பற்றிய மனோபாவம் இயற்கை ஆற்றலில் இருந்தும் இயற்கையின் படைப்புக்களில் இருந்தும் இடையறாது வழிந்தோடிக் கொண்டேயிருக்கின்றது.நான் சிறுவனாக இருந்த போது யார் விளையாடுவதற்கு நிறையத் தீப்பெட்டிப் படங்களை வைத்திருக்கின்றார்களோ,யார் சைக்கிள் டயரை உருட்டாமல் சைக்கிளின் ரிம்மை உருட்டுகின்றார்களோ ,யார் வித்தியாசமான கோலிக் குண்டுகள் இல்லாமல் பால்ரஸை வைத்து விளையாடுகின்றார்களோ ,யார் நிறைய பொன்வண்டுகளை வைத்து விளையாடுகின்றார்களோ அவர்கள் தான் பணக்காரர்கள்.நுங்கு வண்டியை உருட்டிக் கொண்டிருப்பவன் பரம ஏழை.இப்படித்தான் பணக்காரச் சிந்தனை உணரப்பட்டிருந்தது.
3.வயது ஆக ஆக நமது வாழ்க்கையில் தீப்பெட்டிப் படங்களும் கோலிக் குன்டுகளும் இருந்த இடங்களை மற்ற பொருட்கள் ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றன.பொருட்கள் தான் மாறுகின்றதே ஒழிய செல்வம் பற்றிய சிந்தனைகளின் தாக்கம் அப்படியே தான் . உலகில் மனிதனின் சங்கிலித் தொடர் சிந்தனைகளில் சில சிந்தனைகளை அப்படியே மற்றவர்களுக்குத் தொடர விடாமல் ,அதாவது மற்ற மனிதர்களுடைய மனங்களில் தொடர்புகளை ஏற்படுத்த விடாமல் ,அடைத்து வைத்தல் தான் செல்வத்திற்கு அதிபதியாதல் எனலாம்.
4.அதனால் தான் செல்வம் என்பது ஒரு இடத்தில் நில்லாமல் செல்லக் கூடியது என்று பொருள்பட செல்வம் என்றழைக்கப்பட்டது.இந்த சங்கிலித்தொடர் உணர்வுகளில் நாம் நமது மறித்தல் சிந்தனைகளை மட்டும் சங்கிலித்தொடர் உறவில் வெளிப்படுத்தியும் ,மற்றவர்களின் உழைப்பு என்னும் சிந்தனையை மறித்து நமக்குள் ஐக்கியப்படுத்தியும் இருந்தால் நாம் செல்வந்தர் தான்.இப்படிப்பட்ட நமது செயல்கள் மூலம் பொருட்களையும் சேமித்து வருகின்றோம்.
5.நமது செல்வம் பற்றிய உணர்வுகளை வளப்படுத்த மற்றவர்களிடம் இருந்து வரும் செல்வம் பற்றிய சிந்தனைகளை நாம் வழிமறித்து அதனைப் பெற்றுக் கொண்டும் , மற்றவர்களுக்குஅதனைக் கடத்தாமல் அதற்கு மாறாக நமது செல்வம் சேர்க்கும் சிந்தனைகளைக் கடத்தும் வித்தையைத் தெரிந்து வைத்திருந்தால் நாம் செல்வந்தர்கள் தான்.ஆனால் இது இயற்கையின் விதிகளுக்கு முரண் ஆனது இயற்கை எதையும் இயக்கத்தோடும் ஒன்றை ஒன்று எல்லாவிதத்திலும் தொடர்போடும் தான் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றது.
6.ஒரு மனதில் ஏற்படும் இயக்கமோ சிந்தனையோ எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றும் ,அந்த இயக்கத்தின் வெளிப்பாடு எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகத் தான் இயற்கை மனிதர்களையும் மற்றவற்றையும் ஏன் தன்னையும் கூட இந்தக் கண்ணுக்குத் தெரியாத தன்னுடைய பிணைத்தல் சங்கிலிகளால் இணைத்து வைத்துள்ளது .இதனை உணராமல் நாம் மற்றவர்களுடன் மனத் தொடர்புடன் இணைக்க வேண்டிய செல்வம் பற்றிய எண்ணங்களை இணைக்காமல் தடைப் படுத்துவது என்பது மனிதர்களின் பார்வைக்கு செல்வந்தர்கள் என்று காட்டலாம் ஆனால் இயற்கையின் பார்வையில் அப்படி அல்ல.
7.இப்படிப்பட்ட இயற்கையின் விதி மீறல்களான சங்கிலித் தொடர் செல்வ சிந்தனைகளை மறித்தல்கள் மூலமாக மனிதனால் ஏற்றத்தாழ்வுகளும் முரண்பாடுகளும் சமூகத்தில் உருவாக்கப்படுகின்றன.ஆனால் இயற்கையின் விதியை மீறுதல் என்பது யாராலும் முடியாதது எந்த ஒரு மனிதனும் இப்படிப்பட்ட சங்கிலித் தொடர் மறிப்புகளை நீண்ட நாட்களுக்கு பராமரிக்க முடியாது.அது ஒரு நாள்மனிதன் விட்டு மனிதன் மாறியே தீரும் செல்வம் என்னும் சிந்தனை ஒரு மனிதனின் மனதின் மறிப்புகளில் இருந்து இன்னொரு மனிதனுக்கு மாறிச் செல்லும்.
8.மனித இனத்தின் இந்த மறித்தல்கள் இயற்கையின் படைப்புகளில் தொடங்கி இயற்கையின் படைப்பினிலேயே முடிக்கப்படுகின்றது.இப்படிப்பட்ட செல்வ சிந்தனைகளின் மறிப்பானது மனிதனின் மனதில் சிந்தனையாகத் தோன்றி தங்கத்தில் முடிவடைகின்றது.மனிதனது இந்த மறித்தல்கள் முடிவடையும் சிந்தனையாக தங்கம் உள்ளது. செல்வச் சிந்தனையானது கோலிக் குண்டில் தொடங்கி தங்கத்தில் முடிக்கப்படுகின்றது.அதனால் தான் தங்கம் என்பது எளிதில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய எல்லோரும் எளிதில் அடையமுடியாத சிந்தனையாகவும் பொருளாகவும் உள்ளது.
9.தங்கம் என்பது எளிதில் விளையும் ஒரு பொருளாக மனித இனத்தால் ஆக்கப்படும் வரை.அப்படி ஆக்கப்படும் காலமும் வெகு தூரத்தில் இல்லை.அதன் பின்பு இந்த சங்கிலி மறித்தல்கள் என்னும் தடையில் இருந்து மனித இனம் உறுதியாக வெளியேறி .இயற்கையின் விருப்பமான எண்ணங்களைப் படைத்து அதனை சங்கிலித் தொடர் மூலமாக அணைவரும் பெறும்படியாக மாறும்.அப்போது மனிதனின் சிந்தனைகள் மட்டுமே செல்வமாக மதிப்பிடப்படும் காலம் வரும்.அப்போதும் கூட இந்த சங்கிலி மறித்தல்கள் இல்லாமல் இருக்கும் என்று சொல்ல முடியாது.
சுய முன்னேற்றம்-வேகமாகச் செல்வந்தர்கள் ஆவோம்.
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:59:00
Rating:
No comments: