திமுகவுடன்தான் கூட்டணி - இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்

திருச்சி: மதவாத சக்திகளுடன் ஒருபோதும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கூட்டணி அமைக்காது. தமிழகத்தில் திமுகவுடன் மட்டுமே கூட்டணி வைப்போம் என்று அக்கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான இ. அகமது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மற்றும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் டிசம்பர் 28ம் தேதி நடைபெற்றது. இதையொட்டி முஸ்லிம் லீக் மாணவரணி (MSF), இளைஞர் அணி (MYL) , தொழிலாளர் அணியினர் (STU) பல்லாயிரக்கணக்கில் பங்கேற்ற "இளம் பிறை பேரணி' வெஸ்ட்ரி பள்ளி மைதானத்திலிருந்து மாநாடு நடந்த உழவர் சந்தை மைதானம் வரை நடந்தது. மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 மஹல்லா ஜமா அத்தினர் கெளரவித்து பாராட்டப்பட்டனர். மேலும் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசிய பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான காஜா மொஹைதீன் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டில் அகமது பேசுகையில், மதவாத, இனவாத சக்திகளுடன் நாங்கள் ஒருபோதும் கை குலுக்க மாட்டோம். மதச்சார்பற்ற சக்திகளுடன் மட்டுமே கூட்டணி வைப்போம். மறைந்த தலைவர் காயிதே மில்லத்தின் நோக்கங்களை சிறப்புற நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் நாங்கள் செயல்படுகிறோம். இந்திய மண்ணில் எங்களது கட்சி ஆழ வேரூண்றியுள்ள ஒரு அமைப்பாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுடன் எங்களது கூட்டணி தொடர்கிறது. தொடரும் என்றார் அகமது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 21 தீர்மானங்களில் ஒன்றில், திமுக தலைமையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறப்பட்டிருந்தது. மேலும், அதிமுக அரசின் மக்கள் விரோத, சர்வாதிகார மனப்பான்மைக்கு தமிழகத்தில் உள்ளஅனைத்துக் கட்சிகளும் முடிவு கட்ட வேண்டும். இதற்கு வாக்குகள் சிதறி விடாமல் காக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. முழுமையான மது விலக்கை அமல்படுத்தக் கோரி ஒரு தீர்மானமும், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும், முஸ்லீம்களுக்கு தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முஸ்லீம் மதத்திற்கு மாறியவர்களையும் பிற்பட்ட வகுப்பினராக அ
ங்கீகரிக்கக் கோரி இன்னொரு தீர்மானம் போடப்பட்டது.
திமுகவுடன்தான் கூட்டணி - இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் திமுகவுடன்தான் கூட்டணி - இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் Reviewed by நமதூர் செய்திகள் on 23:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.