பிரபல பாடகி நகித் அஃப்ரீனுக்கு எதிராக வழங்கப்பட்ட ஃபத்வா உண்மையா?
கவுஹாத்தி(16 மார்ச் 20170: பிரபல முஸ்லிம் இளம் பாடகி நகித் அஃப்ரினுக்கு முஸ்லிம் உலமாக்கள் ஃபத்வா வழங்கியதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானது என்று தற்போது தெரியவந்துள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நகித் அப்ரீன் ( வயது 16) கடந்த 2015 ஆம் ஆண்டு இசை ரியாலிட்டி டிவி நிகழ்ச்சி ஒன்றில் இரண்டாவது பரிசு பெற்றார். இந்நிலையில் வரும் மார்ச் 25 ஆம் தேதி பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு எதிராகவும் பாடகி நகித் அஃப்ரினுக்கு எதிராகவும் உலமாக்கள் ஃபத்வா கொடுத்ததாக முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் உண்மை அதுவல்ல என்று தற்போது தெரியவந்துள்ளது.
வரும் 25 ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடம் மசூதிக்கு அருகில் என்பதால் இசை நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் அவ்வாறு நகித் அஃப்ரின் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சியை மசூதிக்கு அருகில் நடத்தக் கூடாது என்றுதான் சிலர் கையொப்பமிட்ட துண்டு சீட்டு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஊடகங்கள் மார்க்க பாடகி நகித் அஃப்ரினுக்கு எதிரான ஃபத்வா என்று தவறாக செய்தி வெளியிட்டுள்ளன.
இசை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா என்ற கருத்து ஒரு சில முஸ்லிம் அறிஞர்களால் இன்றும் விவாதத்தில் உள்ளமை குறிப்பிடத்தகக்து.
பிரபல பாடகி நகித் அஃப்ரீனுக்கு எதிராக வழங்கப்பட்ட ஃபத்வா உண்மையா?
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:04:00
Rating:
No comments: