தாமிரபரணியில் உபரிநீரே இல்லை : கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
குளிர்பான ஆலைகள் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது மதுரை கிளை உயர்நீதிமன்றம். இது சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குளிர்பான ஆலைகளுக்கு எதிராக பல ஆண்டுகளுக்குமுன்பே கருத்தரங்குகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவர் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ஒரு வர்த்தக நிறுவனத்துக்கு 1000 லிட்டர் தண்ணீர் ரூ.37.50 என்ற விலைக்கு அரசே வழங்க ஒப்பந்தம் போட்டிருப்பதையும், அதை நீதிமன்றம் சரி என்று ஏற்றுக்கொண்டிருப்பதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தாமிரபரணியில் ஓடும் உபரிநீரை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக அறிகிறேன். இந்தியாவின் நீராதாரத் துறை (Central Water Commission) அறிக்கைப்படி, பிரம்மபுத்திராவில் மட்டும் சிறிது உபரிநீர் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தியாவில் ஓடும் எந்த நதியிலும் உபரிநீர் இல்லை. தாமிரபரணி ஆற்றில் நீர்மானிகளே (Water guage) கிடையாது. எந்த இடத்தில் ஓடும் நீரை உபரிநீர் என்கிறார்கள். அப்படியே உபரிநீர் இருந்தாலும், அதை எப்படி ஒரு தனியார் நிறுவனம் எடுக்க முடியும்?
தண்ணீர் என்பது ஒரு அடிப்படை வளம். அது விற்பனைப் பண்டம் அல்ல. அங்குள்ள மக்களுக்கு விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. குடிக்கவே தண்ணீர் இல்லை. அங்கு சாக்கடைதான் ஓடுகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்க முடியாது. தண்ணீர் பிரச்னையில் சட்டப் பார்வை மட்டுமின்றி, சமூகப் பார்வையுடன் நீதிமன்றம் அணுகியிருக்க வேண்டும்.
பெப்ஸி, கோக் நிறுவனங்களுக்கு எதிராக மட்டுமே வியாபாரத் தடை உள்ளிட்ட பிரச்னைகள் கிளப்பப்படுவதாக புகார் கூறுகின்றனரே? காளிமார்க், பொவன்டோ உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவாக வெளிநாட்டு நிறுவனங்களான பெப்ஸி, கோக் ஆகியவற்றை தடை செய்ய முயற்சி எடுப்பதாக வாதிடப்படுகிறது. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. இப்போது வெளிவந்துள்ள தீர்ப்பு தாமிரபரணி தண்ணீர் பிரச்னைதான். மற்ற நிறுவனங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை. ஒரு பொருளுக்கு தடை விதிக்க வேண்டுமென்றால், அரசு அல்லது நீதிமன்றம்தான் தடை விதிக்க வேண்டும். மக்களே சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்ற எதிர்த்தரப்பு வாதம் குறித்து உங்கள் கருத்து? கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் என்று அறிவித்திருப்பது வியாபாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு. தாமிரபரணி தண்ணீரை எடுக்க அனுமதி அளித்திருப்பது தவறு என்பதுதான் இப்போதுள்ள பிரச்னை.
நன்றி: தி ஹிந்து
தாமிரபரணியில் உபரிநீரே இல்லை : கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:59:00
Rating:
No comments: