நலம் தரும் கருப்பட்டி!
வெள்ளை சுத்தத்தின் நிறமாக பார்க்கப்படுகிறது. ஆகவே கடந்த 30 வருடங்களாக வெள்ளைச்சர்க்கரை நம் சமையல் அறையில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டது. ஆனால் அதுவே நாம் நோயாளியாக மாறுவதற்கு அச்சாரமாகிவிட்டது.
நமது முன்னோர்கள் அதிகம் பயன்படுத்தியது கருப்பட்டி, வெல்லம் போன்றவையே. அதிலும் கருப்பட்டி மிகப் பிரதான இடத்தை பிடித்திருந்தது. தற்போது நாம் உபயோகிப்பதை விட மேலை நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி ஆகிறது நம் கருப்பட்டி.
வைட்டமின் பி 6 மற்றும் பி 12 குறைவாக உட்கொள்பவர்களுக்கு, மன அழுத்தம் அதிகம் காணப்படும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. நம் கருப்பட்டியில் இவ்விரண்டு சத்துக்களும் கருப்பட்டியில் அதிகம் உள்ளது. மனச்சோர்வுடன் இருக்கும் போது, வெதுவெதுப்பான பாலில் கருப்பட்டி சேர்த்து குடித்துப் பாருங்கள், மனச் சோர்வா? எனக்கா? எனக் கேள்வி கேட்க வைக்கும். நம் அவசர உலகத்திற்கு ஏற்ப தற்போது கருப்பட்டி தூளாகவும் கிடைக்கிறது. இனியாவது, வெள்ளை சர்க்கரையை வெளியேற்றி நம் பாரம்பரிய கருப்பட்டியை உணவில் சேருங்கள்!
நலம் தரும் கருப்பட்டி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:02:00
Rating:
No comments: