தற்கொலையை தடுத்து நிறுத்துங்கள் : உச்சநீதிமன்றம்!
விவசாயிகளின் தற்கொலைக்குப் பிறகு இழப்பீடு வழங்குவதைவிட, அவர்களின் தற்கொலையைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகளவில் நிகழ்ந்துவருகிறது. இதற்காக, விவசாயிகள் தற்கொலை மற்றும் விவசாய இழப்பீட்டை ஒழுங்குபடுத்தக்கோரி தனியார் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘விவசாயிகள் தற்கொலையில் இழப்பீடு வழங்குவது மட்டும் தீர்வாகாது. விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு, விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க 12 திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்திருந்தது. அதையடுத்து, மேல் நடவடிக்கை குறித்து மத்திய அரசு இரண்டு வாரத்தில் அறிக்கையளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இந்த விசாரணையை வருகிற 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தற்கொலையை தடுத்து நிறுத்துங்கள் : உச்சநீதிமன்றம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:51:00
Rating:
No comments: