சேலம் உருக்காலை : மத்திய அரசு நடவடிக்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு!
சேலம் உருக்காலை தனியார் நிறுவனத்துக்கு தாரைவார்ப்பதற்கு எதிராக உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சேலம் உருக்காலை நிறுவனத்தில் ஆண்டொன்றுக்கு 4.4 லட்சம் டன் அளவுக்கு உருக்கு உற்பத்தி நடைபெறுகிறது. இந்த உருக்காலையில் சுமார் 2,500 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் பட்டியலில் சேலம் உருக்காலையும் ஒன்றாகும்.
தமிழகத்தில் சுமார் 40 ஆண்டுகளாக செயல்படும் இந்த உருக்காலையில், 3 லட்சத்து 40,000 டன் அளவு துருப்பிடிக்காத இரும்பு தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் செயல்பட்டுவரும் இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிராக, கடந்த சில தினங்களாக சேலம் உருக்காலை தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதற்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தன.
இந்நிலையில், மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சேலம் உருக்காலை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஏராளமான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சேலம் உருக்காலை : மத்திய அரசு நடவடிக்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:45:00
Rating:
No comments: