சீனாவின் பரிசை ஏற்கும் ஜெர்மனி!
கார்ல் மார்க்ஸின் பிறந்த நாளையொட்டி ஜெர்மனிக்கு கார்ல் மார்க்ஸின் வெண்கலச் சிலையை பரிசாக அளிப்பதாக அறிவித்திருந்தது. இப்பரிசை பெற்றுக்கொள்வதென ஜெர்மனி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கார்ல் மார்க்ஸின் 200வது பிறந்த நாளையொட்டி அவர் பிறந்த ஊரான டிரையர் என்னும் நகரத்தில் அவரின் வாழ்க்கை குறித்த தகவல்களை கண்காட்சியாக வைக்க அந்நகர நிர்வாகம் முடிவு செய்திருந்தது. மேற்கு ஜெர்மனியில் மொசெல் நதியோரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. கார்ல் மார்க்ஸின் 200வது பிறந்த நாளுக்கு 20 அடியில் வெண்கலத்தால் ஆன கார்ல் மார்க்ஸின் சிலையை பரிசளிக்க போவதாக கடந்த வருடமே சீனா அறிவித்திருந்த்து. அப்பரிசை ஏற்பது குறித்து டிரையர் நகர நிர்வாகம் ஆலோசனை நட்த்தியது. தற்போது அப்பரிசை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்யபட்டுள்ளது. சுமார் 20 அடியில் வெண்கலத்தால் ஆன இச்சிலையை பொருத்த 1,05,000 யூரோக்கள் செலாவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவுகளில் மூன்றில் இரண்டு பங்கை சீனா ஏற்றுக்கொள்ளும் என அறிவித்திருக்கிறது. எனவே மார்க்ஸின் பிற்ந்தநாளான மே 5-ஆம் தேதி டிரையர் நகரத்தில் நல்ல சுற்றுலா வரவு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சீனாவின் பரிசை ஏற்கும் ஜெர்மனி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:52:00
Rating:
No comments: