வருமான வரி செலுத்த ஆதார் கட்டாயம்!
பல்வேறு அரசு நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ரேஷன் பொருட்களைப் பெறவும், பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கும், இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெறவும், வாகனங்களைப் பதிவு செய்யவும், பள்ளி மாணவர்கள் சத்துணவை பெறவும், ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகளைப் பெறவும், கல்வி உதவித்தொகை பெறவும், பொதுத் தேர்வுகளை எழுதவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 111 கோடி பேருக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வருமான வரி தாக்கல் செய்யவும், பான் கார்டு பெறவும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ளார். அதன்படி, வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் வருமான வரி தாக்கல் செய்யும்போது ஆதார் எண் கட்டாயம் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்த ஆதார் கட்டாயம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:42:00
Rating:
No comments: