திமுக கூட்டணிக்கு 13 அமைப்புகள் ஆதரவு.
சென்னை: திமுக கூட்டணிக்கு 13 குட்டிக் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன இந்த அமைப்புகளின் நிர்வாகிகள், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறி்க்கை:
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பின் வரும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், நேரில் சந்தித்து நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததனர்.
அப்போது கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினரும், அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ். பாரதி, துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி, தலைமை நிலைய செயலாளர்கள் கு.க. செல்வம், ஆ.த.சதாசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஆதரவு தெரிவித்த அமைப்புகள்
பெரியார் அம்பேத்கர் முன்னேற்றக் கழகம்
ஜனநாயக முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
ஆல் இண்டியா ட்ரூ கிறிஸ்டியன் கவுன்சில்
தென்னிந்திய விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம்
புரட்சி பாரத மக்கள் கட்சி
தமிழ்நாடு பால் முகவர்கள் உற்பத்தியாளர் தொழிலாளர் நலச் சங்கம் ஜனநாயக புரட்சி முன்னணி
சிவாஜி சமூக நலப் பேரவை
சிவாஜி சமூக நலப் பேரவை
கிராம கோவில் பூசாரிகள்,
கிராமக் கலை ஜோதிடர்கள் நலச் சங்கம்
இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி
மக்கள் கூட்டமைப்புக் கட்சி
கிராமணி மக்கள் வாழ்வுரிமை நலச் சங்கம்
அனைத்துல அருந்ததியர் மக்கள் இயக்கம்
அண்ணா மக்கள் இயக்கம்
கிறிஸ்தவ பாதுகாப்பு இயக்கம்
அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி
திமுக கூட்டணிக்கு 13 அமைப்புகள் ஆதரவு.
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:57:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:57:00
Rating:

No comments: