தற்கொலை முயற்சி வழக்கிலிருந்து போராளி ஈரோம் சர்மிளா விடுதலை!

போராளி ஈரோம் சர்மிளா, மணிப்பூர் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யக் கோரி நவம்பர் 4, 2000-முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறார். அவருக்கு குழாய்மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைக்காக கடந்த 2006-ஆம் ஆண்டு ஜந்தர்மந்தரில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அதனால் அரசு அவர்மீது தற்கொலை முயற்சி வழக்கை பதிவுசெய்தது. இதுதொடர்பாக டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்தது

தான் தனது உயிரை நேசிப்பதாகவும், தேசத்தந்தை காந்தியே குறிக்கோளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டதுண்டு எனவும், தனது குறிக்கோள் நிறைவேறும்பட்சத்தில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிடுவாரெனவும் சர்மிளா தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹர்விந்தர் சிங், ஈரோம் சர்மிளாவை வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.
தற்கொலை முயற்சி வழக்கிலிருந்து போராளி ஈரோம் சர்மிளா விடுதலை! தற்கொலை முயற்சி வழக்கிலிருந்து போராளி ஈரோம் சர்மிளா விடுதலை! Reviewed by நமதூர் செய்திகள் on 07:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.