விஜயகாந்த் முதல்வர், வைகோ துணை முதல்வர்
தேமுதிக மக்கள் நல கூட்டணி வெற்றி பெற்றால் மதிமுக பொது செயலாளர் வைகோவிற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது.
கோவில்பட்டியில் நடைபெற்ற தேமுதிக மக்கள் நலக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் பேசிய தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்கே சுதிஷ் தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், விஜயகாந்த் முதலமைச்சராக பொறுப்பேற்கும் விழா மதுரையில் நடைபெறும் என்றார்.
அதே போன்று துணை முதலமைச்சர் பதவி மதிமுக பொது செயலாளர் வைகோவிற்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது நீங்கலாக நிதியமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனுக்கும் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
மேலும் கல்வித்துறை, விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார். ஆட்சிக்கு வந்ததும் கிராமங்களில் இலவச இண்டர்நெட் வசதி செய்துகொடுக்கப்படும் என்றும் சுதீஷ் உறுதியளித்தார்.
விஜயகாந்த் முதல்வர், வைகோ துணை முதல்வர்
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:02:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:02:00
Rating:

No comments: