சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்: சேலத்தில் அன்புமணி பேட்டி

பா.ம.க. முதல்–அமைச்சர் வேட்பாளரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சேலம் மாவட்டம் மேட்டூர் உபரிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் திட்டத்தை செயல்படுத்த கோரி டாக்டர் ராமதாஸ் பல ஆண்டுகளாக கோரி வந்தார்.

இது தொடர்பாக சட்டசபையில் குரல் கொடுத்தோம். வழக்கும் போடப்பட்டது. இரு ஆட்சியும் அந்த திட்டத்தை நிறைவேற்ற உறுதியளித்தது. ஆனால், இதுவரை கண்டுகொள்ளவில்லை. இந்த திட்டம் நிறைவேறினால் கூடுதலாக 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். அதுபோல மேட்டூரில் தோனிமடுவவு திட்டத்தை நிறைவேற்ற மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை மந்திரியிடம் கோரிக்கை வைத்தோம்.

ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வருகிற சட்டசபை தேர்தலில் நான் (அன்புமணி) நிச்சயம் போட்டியிடுவேன். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நான் எந்த தொகுதியில் நிற்கிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களுக்கு மேல் உள்ளது. நிச்சயம் பா.ம.க. வெற்றி பெற்ற ஆட்சியமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்: சேலத்தில் அன்புமணி பேட்டி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்: சேலத்தில் அன்புமணி பேட்டி Reviewed by நமதூர் செய்திகள் on 04:04:00 Rating: 5

No comments:

Powered by Blogger.