காங்கிரஸ் – மார்க்சிஸ்ட் இடையே விரைவில் உடன்பாடு?

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் இம்மாநிலத்தில் காங்கிரஸ் – மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கிடையேயான கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இருகட்சிகளுக்கிடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 294 தொகுதிகளில் காங்கிரஸ் 100 தொகுதிகளை கேட்பதாகவும், ஆனால் 75 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கூறுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் – மார்க்சிஸ்ட் இடையே விரைவில் உடன்பாடு? காங்கிரஸ் – மார்க்சிஸ்ட் இடையே விரைவில் உடன்பாடு? Reviewed by நமதூர் செய்திகள் on 23:23:00 Rating: 5

No comments:

Powered by Blogger.