’விஜயகாந்த் ஒரு குழப்பவாதி’
அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே தேர்தலைச் சந்தித்தால், அது ஆளும் கட்சிக்குத்தான் சாதகமாக அமையும் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே சிறுகனூரில் திராவிட கழகத்தின் சார்பில் சமூக நீதி மாநாடு சனிக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு குழப்பவாதி என்றும், திமுக கூட்டணியில் தேமுதிக வராததால் திமுகவுக்கு எந்த பாதகமும் இல்லை என்றார். மேலும் அவர், இந்த மாநாட்டில் டெல்லி, ஹைதராபாத், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.
’விஜயகாந்த் ஒரு குழப்பவாதி’
Reviewed by நமதூர் செய்திகள்
on
06:35:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
06:35:00
Rating:

No comments: