களக்காடு அருகே கிரானைட் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நான்கு கிராம மக்கள் உண்ணாவிரதம்
நெல்லை மாவட்டம் களக்காடுக்கு அருகில் உள்ள கடம்போடுவாழ்வு ஊராட்சியில் இயங்கிவரும் கிரானைட் குவாரிக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்யக்கோரி 26.02.2016, வெள்ளிக்கிழமை களக்காடு புதிய பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கிருஷ்னன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் களக்காடு பேரூராட்சி தலைவர் P.C.ராஜன் தி.மு.க, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, விசிக, எஸ்.டி.பி.ஐ மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதில் நான்கு கிராமங்களை சார்ந்த பெண்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
களக்காடு அருகே கிரானைட் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நான்கு கிராம மக்கள் உண்ணாவிரதம்
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:49:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:49:00
Rating:

No comments: