தலித் பெண் கூட்டு பலாத்கார வழக்கில் இரண்டு காவல்துறையினர் தற்காலிக பணி நீக்கம்

தெலுங்கானாவில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் கடமையில் அலட்சியமாக இருந்ததற்காக கரீம்நகர் பகுதியின் வீனவன்கா காவல்நிலையத்தில் பணியாற்றிய துணை ஆய்வாளர் கிரண் மற்றும் தலைமை காவலர் பரசுராம் ஆகிய இரண்டு போலீசார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


20 வயது தலித் பெண் காவல்துறை ஆட்சேர்ப்புக்கான பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார். அப்போது ஸ்ரீநிவாஸ்(22) என்பவர் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தோழியை இரு சக்கர வாகனத்தில் வைத்து புத்தகங்கள் வாங்க செல்கிறோம் என்கிற பெயரில் அழைத்து சென்றிருக்கிறார். அவர் செல்லும் பாதை மாறவே அதில் சந்தேகம் ஏற்பட்டு அப்பெண்ணின் தோழி இரு சக்கர வாகனத்தில் இருந்து குதித்துவிட்டார். பின்னர் அந்த பெண் தனது தந்தையின் போனில் இருந்து துணை ஆய்வாளருக்கு நடந்த சம்பவங்கள் குறித்து தகவல் கொடுத்துள்ளார். ஆனால் துணை ஆய்வாளர் தான் வேறு ஒரு பாதுகாப்பு வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக அலட்சியமாக கூறியுள்ளார்.

பின்னர் பாதிக்கபப்ட்ட பெண்ணை ஸ்ரீநிவாஸுடன் சேர்ந்து மற்றொரு சிறுவனும் பலாத்காரம் செய்துள்ளான். இதனை இன்னொரு சிறுவன் தனது மொபைல் போனில் படமெடுத்துள்ளான். பிப்ரவரி 10 தேதி நடந்த இந்த கொடுமை சென்ற வாரம் தான் பாதிக்கப்பட்ட பெண் தன் பெற்றோரிடம் கூற வெளியே தெரிந்துள்ளது.

குற்றவாளியை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கடுமையாக தாக்கியதில் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவன் மீது நிர்பயா சட்டம், மற்றும் SC/ST (Prevention of Atrocities) சட்டம் மற்றும் தகவல் தொழிநுட்ப சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கானா உள்துறை அமைச்சர் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விசாரணையை துரிதப்படுத்த தான் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தலித் பெண் கூட்டு பலாத்கார வழக்கில் இரண்டு காவல்துறையினர் தற்காலிக பணி நீக்கம் தலித் பெண் கூட்டு பலாத்கார வழக்கில் இரண்டு காவல்துறையினர் தற்காலிக பணி நீக்கம் Reviewed by நமதூர் செய்திகள் on 00:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.