தற்போது பல இடங்களில் 'பதட்டம்' காணப்படுகிறதே? - நமதூரார் பதில்கள்.


எல்லா கட்சிகளும் தேமுதிகவை எதிர்பார்ப்பது அதன் வளர்ச்சியைதானே காட்டுகிறது?
பலமுனை போட்டி இருக்கும் இந்த தேர்தலில் சிறு வாக்கு வங்கியும் வெற்றி-தோல்வியை தீர்மானிக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் சுமார் 4% வாக்குகளை வைத்துள்ள தேமுதிகவை அனைத்து கட்சிகளும் தங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் தேமுதிக விற்கு முன்பு இருந்த அந்த 'மக்கள் செல்வாக்கு' தற்போது இல்லை என்பதாகவும், குறைந்து வருவதாகவும் தெரிகிறது. அதற்கு அந்த கட்சி கடைபிடிக்கும் 'பேரக் கொள்கை' ஒரு காரணமாக இருக்கிறது.
சிறையில் இருந்து வெளியே வந்த கன்ஹையா குமாரின் பேச்சு பரவலாக வரவேற்கப்படுவது எதை உணர்த்துகின்றன?
ஆம்! அவர் தேர்ந்த ஒரு அரசியல் தலைவரைப்போல் பேசுகின்றார் நக்கல், நையாண்டியுடன். சிறை அவரை பயமுறுத்தவில்லை. மேலும் பக்குவபடுத்தி இருக்கிறது. தேசத்தின் இன்றைய சூழலை மக்கள் முன் தனது பேச்சால் காட்சிபடுத்தி இருக்கிறார். அரசாங்கத்தின் தோல்விகளை மறக்கடிக்க தேச துரோக பிரச்சாரம் பெரியதாக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவரின் பேச்சின் மூலம் யார் தேச துரோகிகள் என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தவுடன் 'ஊழல் கூட்டணி' என்று விமர்சித்த இடதுசாரிகள் அதே ஊழல் காங்கிரசுடன் மேற்கு வங்கத்தில் கூட்டணி வைக்க விரும்புகிறார்களே?
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! அரசியலில் வெற்றிதான் பேசுமே தவிர, கொள்கை அல்ல.

தமிழகத்தில் 'மாற்றம்' வருமா?
'மாற்றம்' என்று வருபவர்களுக்கு 'ஏமாற்றம்' என்பதையே பரிசாக அளிப்பவர்கள் நமது மக்கள் என்பது கடந்தகால வரலாறு.

தற்போது பல இடங்களில் 'பதட்டம்' காணப்படுகிறதே?
இந்து-முஸ்லிம் மக்கள் மத்தியில் சிறு, சிறு அல்லது நீண்டகால பிரச்சனைகளை தற்போது கிளப்பி தனக்கு சாதகமாக பயன்படுத்தி சாதித்துக்கொள்ள விரும்புகிறார்கள். அப்படி முடியவில்லை என்றால் பிரச்சனைகளை உருவாக்கி தன் அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள பயன்படுதிக்கொள்ளவே இதுபோன்ற 'பதட்டங்கள்' திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகின்றன.

- நமதூரார். 

தற்போது பல இடங்களில் 'பதட்டம்' காணப்படுகிறதே? - நமதூரார் பதில்கள். தற்போது பல இடங்களில் 'பதட்டம்' காணப்படுகிறதே? - நமதூரார் பதில்கள். Reviewed by நமதூர் செய்திகள் on 19:41:00 Rating: 5

No comments:

Powered by Blogger.