வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் புகைப்படங்கள்!

சென்னை (05-03-16): வரும் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் மே மாதம் 16 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேண்டி வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

இந்த முறையின் மூலம் வாக்காளர்களின் பெயர் மற்றும் ஒரே பெயரில் இரண்டு பேர் இருப்பது போன்ற குழப்பங்கள் தடுக்கப்படும். ஏனென்றால் தேர்தலை பொறுத்தவரை எங்களின் முழு கவனமும் வாக்காளர்கள்தான் என்றும் கூறினார்.
அது மட்டுமல்லாமல் தேர்தல் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பாக புகைப்படத்துடன் வாக்காளர் அடையாளச் சீட்டு வழங்கப்பட்டுவிடும். மேலும் அனைத்து மகளிர் வாக்குச்சாவடி போன்ற 7 அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் புகைப்படங்கள்! வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் புகைப்படங்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.