மா.கம்யூ-92; இ.கம்யூ-27 தொகுதிகளில் போட்டி

கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கன தொகுதிப் பங்கீட்டை வெளியிட்டுள்ளன.
மொத்தம் 140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநில சட்டப்பேரவைக்கு வரும் 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இதில் இடது ஜனநாயக முன்னணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 27 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 92 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஐந்து தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் கேரள ஜனநாயக காங்கிரஸ் தலா நான்கு தொகுதிகளிலும், இந்திய தேசிய லீக் மூன்று தொகுதிகளிலும், மற்றவர்கள் ஐந்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். கேரள மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், இடதுசாரிகள் கூட்டணிக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
மா.கம்யூ-92; இ.கம்யூ-27 தொகுதிகளில் போட்டி மா.கம்யூ-92; இ.கம்யூ-27 தொகுதிகளில் போட்டி Reviewed by நமதூர் செய்திகள் on 08:07:00 Rating: 5

No comments:

Powered by Blogger.