திமுக கூட்டணியில் விஜயகாந்த்?: நம்பிக்கையுடன் காத்திருக்கும் மக்கள் நலக்கூட்டணி

தமிழக சட்டபேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் தேர்தல் களம் சூடு கிளப்பிகொண்டிருக்கிறது.

இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் சூராவளி சுற்றுபயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அக்கூட்டணியில் பங்கேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் இன்று காலை சேலம் வந்தனர். அப்போது திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்
விஜயகாந்த் குறித்து கடந்த சில வாரங்களாக வாட்ஸ்ஆப் மற்றும் வலைதளங்களில் வதந்தியை பரப்பி வருகிறார்கள். அவர் திமுக கூட்டணிக்கு செல்ல இருப்பதாக செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆனால் கூட்டணி குறித்து அவர் இன்னும் அறிவிக்கவில்லை. உறுதியாக அவர் தி.மு.க. கூட்டணிக்கு செல்லமாட்டார். எங்கள் கூட்டணிக்கு அவர் வரவேண்டும் என்று கூறினார்.
திமுக கூட்டணியில் விஜயகாந்த்?: நம்பிக்கையுடன் காத்திருக்கும் மக்கள் நலக்கூட்டணி திமுக கூட்டணியில் விஜயகாந்த்?: நம்பிக்கையுடன் காத்திருக்கும் மக்கள் நலக்கூட்டணி Reviewed by நமதூர் செய்திகள் on 23:58:00 Rating: 5

No comments:

Powered by Blogger.