புதுவாழ்வு திட்டத்தில் 1,800 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் பெரம்பலூர் கலெக்டர் தகவல்
புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 2 ஆயிரத்து 700 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப் பட்டு 1,800 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-
புதுவாழ்வு திட்டம்
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட் டத்தில் ஆலத்தூர், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய 3 ஒன்றியங்களில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் குழுவில் சேராத இலக்கு மக் களை ஒருங்கிணைத்து மகளிர் சுயஉதவி குழு மற்றும் மாற்றுத் திறனாளி குழு அமைப்பது, திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கு வது, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் ஓட்டுநர் பயிற்சி, ஜே.சி.பி. இயக்குபவர், சி.என்.சி. இயக்குபவர், வெல்டிங், சமையல் கலை, அழகு கலை போன்ற தொழிற் திறன் பயிற்சி வழங்குவது. மேலும,¢ பிரபல நிறுவனங் களான டி.வி.எஸ்., எல் அண்ட் டி, எம்.ஆர்.எப். கார்மென்ட்ஸ் கம்பெனிகளில் நேரடி வேலை வாய்ப்பையும் பெற்று தருவது மட்டும் அல்லாமல் ஒத்த தொழில் குழுக்களை உருவாக் குதல் போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
நிதி ஒதுக்கீடு
மேலும், இலக்கு மக்கள் குடும்பங்கள் மற்றும் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் சென்ற டைவதை உறுதி செய்தலுக் கான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இச்செயல்பாடுகளுக்காக 103 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கான மொத்த நிதியாக ரூ.16 கோடியே 86 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு இதில் முதல் தவணை யாக, 6 கோடியே 75 லட்சம் வழங்கி பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் 50 சதவீத நிதியில் 2 ஆயிரத்து 872 மாற்றுத் திறனாளி மற்றும் நலிவுற்றோர் களுக்கு அத்தியா வசிய தேவை மற்றும் வாழ்வாதாரம் நடவடிக்கை களுக்காக ரூ.2 கோடியே 51 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1800 பேருக்கு வேலைவாய்ப்பு
இரண்டாம் தவணையாக 6 கோடியே 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மண்டல மதிப்பீட்டு அணியினர் ஆய்வு செய்த பின்னர் 25 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.1 கோடியே 71 லட்சம் நிதி வழங்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் 934 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 17 கோடி வங்கி இணைப்பையும் சுமார் 2 ஆயிரத்து 700 இளை ஞர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்கப் பட்டுள்ளது. இதில் 1,800 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள நபர்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்று தரு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மேலும், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு 3-ம் தவணை நிதி மற்றும் அமுத சுரபி நிதிகள் பெற தற்சமயம் பணிகள் நடைபெற்று வருகி றது.
எனவே சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் புது வாழ்வு திட்டத்தை முழுமை யாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
எனவே சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் புது வாழ்வு திட்டத்தை முழுமை யாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
புதுவாழ்வு திட்டத்தில் 1,800 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் பெரம்பலூர் கலெக்டர் தகவல்
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:15:00
Rating:
No comments: