மீத்தேன் வாயு திட்டத்தை ரத்து செய்யகோரி பேரணி


தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 667 சதுர கி.மீ. பரப்பளவிற்கு படர்ந்துள்ள நிலக்கரியை எடுக்கும் முயற்சியாக அதன்மீது படர்ந்துள்ள மீத்தேன் எரிவாயுவை வெளிகொண்டு வர மத்திய அரசு தனியார் நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திட்டங்களை எதிர்த்து சமீபத்தில் மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போராடினார்.
இந்தநிலையில் மன்னார்குடியில் மீத்தேன் திட்டத்தை கைவிடக்கோரி பேரணி–பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் நடைபெற்ற இப்பேரணி நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. பேரணியை வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தொடங்கி வைத்தார். தேரடியில் பேரணி முடிவடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேரழிப்புக்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின் தலைமை தாங்கினார். பொங்கு தமிழ் இயக்க தலைவர் டாக்டர் பாரதிச்செல்வன், பொருளாளர் சதாசிவம், திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் ரெத்தினகுமார், தஞ்சாவூர் நல்லதுரை, நாகை மாவட்ட தனபாலன், தமிழ் முற்றம் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணியில் 300 பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மீத்தேன் வாயு திட்டத்தை ரத்து செய்யகோரி பேரணி மீத்தேன் வாயு திட்டத்தை ரத்து செய்யகோரி பேரணி Reviewed by நமதூர் செய்திகள் on 03:42:00 Rating: 5

No comments:

Powered by Blogger.