பெரம்பலூர் ஒன்றிய பைக்கா போட்டி வீரர், வீராங்கனைகள் சாதனை
பெரம்பலூர் : பெரம்பலூரில் நேற்று நடத்தப்பட்ட ஒன்றிய அளவிலான பைக்கா விளையாட்டுப் போட்டியில் வீரர், வீராங்கனைகள் முதலிடத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். இதில் கால்பந்து விளையாட்டில் ஆண்கள் பிரிவில் குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியும், பெண்கள் பிரிவில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் முதலிடத்தை வென்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2013&14ம் ஆண்டுக்கு பெரம்பலூர் ஒன்றிய அளவிலான பைக்கா விளையாட்டுப் போட்டி பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சைமன்ராஜ் துவக்கிவைத்தார்.
இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொதுநிலையினர் என ஏராளமான வீரர், வீராங்கனைகள் திரளாகப் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில் ஆண்களுக் கான கால்பந்து போட்டியில் குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடத்தை வென் றனர். பெண்களுக்கான கால்பந்து போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடத்தை வென்றனர்.
ஆண்களுக்கான பேஸ்கட் பால் போட்டியில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடத்தை வென்றனர். பெண்களுக்கான போட்டியிலும் அதே பள்ளி மாணவிகளே முதலிடத்தை வென்றனர்
இதைத் தொடர்ந்து, ஆண்களுக்கான இறகுப் பந்து போட்டியில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தை வென்றனர். பெண்களுக் கான போட்டியில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடத்தை வென்றனர்.
விளையாட்டுப் போட்டி களை உடற்கல்வி ஆசிரியர்கள் அலெக்சாண்டர், தனபா லன், செந்தமிழ்ச்செல்வன், சரவணன், நாக ராஜன், அதியமான் ஆகி யோர் முன்னின்று நடத்தினர்.இதைத் தொடர்ந்து, நேற்று மாலை 4 மணி அளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு பெரம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயராமன் தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றிபெற்ற அணியினருக்குப் பரிசுத் தொகை வழங்கிப் பாராட்டினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சைமன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Reviewed by நமதூர் செய்திகள்
on
20:07:00
Rating:
No comments: