பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் 4 லட்சத்து 95 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 4 லட்சத்து 95 ஆயிரத்து 153 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் வெளியீடு
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கா ளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வாக்காளர் பட்டியலை கலெக்டர்.தரேஸ் அஹமது முன்னிலையில் வாக்காளர் பதிவு அலுவலரும் மற்றும் பெரம்பலூர் உதவி கலெக்டருமான மதுசூதன் ரெட்டி வெளியிட்டார்.
அதன் பிறகு கலெக்டர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் 1.10.2013 அன்று வெளி யிடப்பட்ட வரைவு வாக்கா ளர் பட்டியலில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 143 வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 441 வாக்காளர்களும் ஆக மொத்தம் 4 லட்சத்து 88 ஆயிரத்து 584 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
திருத்தப்பட்டியல்
1.10.2013 முதல் 31.10.2013 வரை பெறப்பட்ட வாக்காளர் படடியலில் பெயர் சேர்த்தல் படிவங்களின் பேரில் 18 ஆயிரத்து 30 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளனர். இதில் 8 ஆயிரத்து 932 பேர் ஆண்கள் 9 ஆயிரத்து 90 பேர் பெண்கள் 8 பேர் இதரர். வாக்காளர்கள் இறப்பு உள்ளிட்ட காரணங் களுக்காக 6 ஆயிரத்து 461¢ பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 297 வாக்குசாவடிகளில் மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 851 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 525 ஆயிரத்து 226 நபர்கள் ஆண்கள், 1 லட்சத்து 30 ஆயிரத்து 615 நபர்கள் பெண்கள். 10 பேர் இதரர்.
அதேபோல குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 293 வாக்குசாவடிகளில் மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 302 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 982 நபர்கள் ஆண்கள், 1 லட்சத்து 19 ஆயிரத்து 305 நபர்கள் பெண்கள். 15 பேர் இதரர்.
4 லட்சத்து 95 ஆயிரம்
ஆக மொத்தம் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் 4,லட்சத்து 95 ஆயிரத்து 153 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 45ஆயிரத்து 208 நபர்கள் ஆண்கள், 2 லட்சத்து 49 ஆயிரத்து 920 நபர்கள் பெண்கள.¢ இதரர் 25 நபர்கள் உள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிராமங் களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடி நியமன அலுவலர்களிடம் பார்த்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர். சுப்பிரமணியன், உதவி கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மலையாளம், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், பெரம்பலூர் வட்டாட்சியர் ரெங்கராஜீ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் 4 லட்சத்து 95 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் 4 லட்சத்து 95 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் Reviewed by நமதூர் செய்திகள் on 20:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.