பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வலியுறுத்தல்
பெரம்பலூரில், அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு மக்கள் மைய தலைவர் ப. ராமராஜ் அனுப்பிய கோரிக்கை மனு:
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என, 2010-ல் அறிவிக்கப்பட்டு, பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள ஒதியம் கிராமத்துக்குள்பட்ட பகுதியில் 30 ஏக்கர் நிலம், ரூ. 110 கோடி ஒதுக்கப்பட்டு பூமிபூஜை நடைபெற்றது.
பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தனியாக டீன் நியமிக்கப்பட்டு, பெரம்பலூர் ஆட்சியரகத்த்தின் கீழ் தளத்தில் அலுவலகமும் திறக்கப்பட்டது.
அலுவலருக்கு மாதந்தோறும் சம்பளம் மட்டும் சரியாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இன்றும் இந்த அலுவலகத்தில் தகவல் பலகை வைக்கப்பட்டு மூடியே கிடக்கிறது.
ஆனால், பெரம்பலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி அறிவிக்கப்பட்ட தேதியில் அறிவித்த திருவாரூர், தேனி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு செயல்படுகின்றன.
எனவே, மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற அரசின் கொள்கை முடிவுப்படி, நடப்பு நிதியாண்டில் (2014 -2015) மருத்துவக் கல்லூரி தொடங்க உரிய ஆணை பிறப்பித்து, மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்.
பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வலியுறுத்தல்
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:07:00
Rating:
No comments: