வி களத்தூர் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு நிகழ்ச்சி
வி களத்தூர் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு நிகழ்ச்சி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு 9ம் தேதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் ஒரு கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னரே வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 31ம் தேதி அறிவித்தார்.
அதன்படி வி களத்தூர் ஊராட்சியில் 08.01.2014 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
08.01.2014 அன்று நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு நிகழ்ச்சியை
வி களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் நூருல் ஹுதா இஸ்மாயில் அவர்கள் துவங்கி வைத்தார்கள்.
வி களத்தூர் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு நிகழ்ச்சி
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:56:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:56:00
Rating:

No comments: