பெரம்பலூர் அருகே இளம்பெண்ணை கொன்று ஆற்று மணலில் புதைப்பு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள பகுதி கொரக்கவாடி கிராமம். இந்த கிராமத்துக்கும் வில்லுவாடி என்ற இடத்துக்கும் இடையே வெள்ளாறு ஓடுகிறது. இந்த வெள்ளாற்றில் தற்போது தண்ணீர் இல்லாததால் அங்கு மண்ணை தோண்டி ஊற்று மூலமாக தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இதனால் ஆற்றுப்பகுதியில் பல இடங்களில் குழிகள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்று மணல் குழியில் புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை நாய்கள் வெளியில் இழுத்து போட்டு கடித்து குதறியது. இதனைக் கண்ட சிலர் அதுபற்றி வி. களத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோனல் சந்திரா, மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம், வி.களத்தூர் சப்– இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழிக்குள் புதைந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
பிணமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 30 வயதிருக்கும். ரோஸ் கலரில் சேலையும் மற்றும் கறுப்பு நிற ஜாக்கெட், ஊதா நிறத்தில் பாவாடையும் கையில் கடிகாரமும் அணிந் திருந்தார். அவரது கழுத்து இறுக்கப்பட்டதற்கான காயம் இருந்தது. ஆடைகள் அலங்கோல நிலையில் காணப்பட்டது. எனவே அவரை கழுத்தை நெரித்து கொன்று மணலுக்குள் கொடூரமான முறையில் மர்ம ஆசாமிகள் புதைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பிரேத பரி சோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அந்த பெண்ணின் உடலை அனுப்பி வைத்த போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
அந்த பெண் யார் என்றும் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது கள்ளக்காதல் தொடர்பாக கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்று பல கோணங்களில் விசாரித்து வரும் போலீசார் கொலை யா ளிகள் பற்றியும் துப்பு துலக்கி வருகிறார்கள்.
இந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியதால் சம்பவ இடத்தில் ஏராளமான கிராம மக்கள் கூடிவிட்டனர். இத னால் அங்கு பரபரப்பு நிலவி உள்ளது.
பெரம்பலூர் அருகே இளம்பெண்ணை கொன்று ஆற்று மணலில் புதைப்பு
Reviewed by நமதூர் செய்திகள்
on
06:58:00
Rating:
No comments: