பசும் பால் உற்பத்தி பயிற்சிக்கு அழைப்பு


பெரம்பலூர்: "வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் ஜன., 21ம் தேதி பசும்பால் உற்பத்தி பயிற்சி பெற நடக்கிறது' என, மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், இயற்கை வேளாண்மையின் கீழ் சுத்தமான பசும்பால் உற்பத்தி என்ற தலைப்பில், ஜன., 21ம் தேதி காலை, 10 மணி முதல், மாலை, 3 மணி வரை, இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
இதில் லாபகரமான பசும்பால் உற்பத்தி, இயற்கை வேளாண்மை மூலம் பால் உற்பத்தி மற்றும் அதற்கான சந்தை வாய்ப்பு, ஊறுகாய் புல் தயாரித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்று பயன் பெறலாம்.
எனவே பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், தங்களது பெயர் மற்றும் முகவரியை நேரில் அல்லது, 04328 - 293592, 293251 ஆகிய டெலிஃபோன் எண்ணில் தொடர்புகொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம்.
பசும் பால் உற்பத்தி பயிற்சிக்கு அழைப்பு பசும் பால் உற்பத்தி பயிற்சிக்கு அழைப்பு Reviewed by நமதூர் செய்திகள் on 19:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.