துபாயில் நடைபெற்ற ஐஎம்சிடியின் பத்தாம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு
துபாய் தேராவிலுள்ள லாஸ்ட் ஹவர் உணவகத்தின் மாடியில் 17.01.14 அன்று வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணி அளவில் ஐஎம்சிடியின் 10ம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு அதன் பொதுச்செயலாளர் அஹமது அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக ஐஎம்சிடியின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி ஐஎம்சிடியின் மூத்த உறுப்பினர் U.முஹம்மது இஸ்மாயில் அவர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு அனைவருக்கும் இனிப்பும் வழங்கப்பட்டது. இந்த விழா இனிப்புடன் துவங்கியது.
வட்டி ஒழிப்பிற்காக பெரும்பங்காற்றி வட்டியில்லாக்கடன் கொடுத்துவரும் ஐஎம்சிடி துபாயிலுள்ள தமிழ் முஸ்லிம்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த அமைப்பாகும். இந்த ஐஎம்சிடி ஆரம்பித்து 10 வருடம் ஆகியதால் பத்தாம் ஆண்டு விழாவை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை துவக்கிவைத்த ஐஎம்சிடியின் பொதுச்செயலாளர் B.அஹமது அலி அவர்கள் ஐஎம்சிடியின் செயல்பாடுகள் குறித்தும் கடந்த 2013ம் ஆண்டின் தணிக்கைகுழுவின் அறிக்கையையும் விரிவாக விளக்கினார்.
அதனைத்தொடர்ந்து ஐஎம்சிடியின் வட்டியில்லாக்கடன் குழுத்தலைவர் H.ஹசேன் முஹம்மது அவர்கள் கடந்த வருடம் எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டது என்றும் அதில் ஏற்ப்பட்ட பிரச்சனைகளையும் விரிவாக விளக்கினார். வட்டியில்லாக்டன் குழுவில் திருத்தப்பட்ட விதிமுறைகள் அடங்கிய சட்டங்கள் வாசிக்கப்பட்டு அனைத்து உருப்பினர்களுக்கம் நகல் வழங்கப்பட்டது. கடந்த வருடத்தைப்போன்றே இந்த வருடமும் உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பைத் தருமாறு கேட்டுக்கொண்டு உரையை நிறைவு செய்தார்.
ஐஎம்சிடியின் பொருளாளர் A.சாதிக் பாஷா அவர்கள் ஐஎம்சிடியில் கடந்த 2013ம் ஆண்டு உறுப்பினர்கள் தந்த சந்தா தொகை விபரம் மற்றும் அந்த தொகை எந்தெந்த வழிகளில் பொதுசேவை செய்யப்பட்டது என்பதை விளக்கினார்.
அடுத்ததாக பேசிய ஐஎம்சிடியின் தலைவர் F.சவுக்கத் அலி அவர்கள் ஐஎம்சிடி 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11பேர் கூடிசெய்த ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்டது என்றும் தற்பொழுது துபையில் மட்டும் 289 உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்தார். கடந்த காலங்களில் ஐஎம்சிடி சந்தித்த சோதனைகள் என்ன அது எவ்வாறு கையாளப்பட்டது என்பதையும் விரிவாக விளக்கினார்.
தற்பொழுது உறுப்பினர்களாக உள்ளவர்கள் அனைவரும் முத்தான நெல்மனிகள் என்றும் பதறுகள் எல்லாம் நீங்கி விட்டார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் நமது ஐஎம்சிடியில் 67 ஊர்களைச்சேரந்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றும் உங்களுக்காக உதவி செய்யவே ஐஎம்சிடி ஆரம்பிக்கப்பட்டது என்றும் அதேப்போன்று நிர்வாகத்திற்கும் உறுப்பினர்கள் உதவி செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டுத்தொகை (Eligible) ஒரு வருடத்திற்கான முழுமையான தொகையே தவிர முதல் சில மாதங்களிலேயே கேட்டு நிர்வாகத்திற்கு தர்மசங்கடத்தை உறுப்பினர்கள் ஏற்படுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் நிறைவு செய்தார்.
அடுத்ததாக பேசிய ராசல்கைமா கிளையின் பொருளாளர் K.முஹம்மது பாருக் அவர்கள் ஐஎம்சிடியின் ராசல்கைமாவின் செயல்பாடுகள் மற்றும் கடன் வழங்கும் முறைகள் குறித்து விரிவாக விளக்கினார். அமீரகத்திலுள்ள தமிழ் முஸ்லிம்கள் மட்டுமல்ல பங்காளதேஷ் மற்றும் பாக்கிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களும் ஆர்வத்துடன் நமது ஐஎம்சிடியில் சேர்ந்து வட்டியில்லாக்கடனை பெற்று பயனடைந்து வருகிறார்கள் என்றார். மேலும் அமீரகத்தில் வியாபாரிகளுக்கான கடன் திட்டமும் ஐஎம்சிடியின் சார்பாக கடந்த ஆண்டுமுதல் நடத்தப்படுகிறது என்றும் இதில் வியாபாரம் செய்பவர்களும், வியாபாரம் துவங்கும் எண்ணமுள்ளவர்களும் சேர்ந்து பயனடையலாம் என்றார். இந்த வியாபார திட்டத்தில் சேரும் உறுப்பினர்கள் மாதாமாதம் 500 திர்ஹம் செலுத்த வேண்டும் என்றும் 20 மாத தவணையில் கடன் தரப்படும் என்றும் கூறினார். இந்த திட்டத்தில் அமீரகத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களும் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டு நிறைவு செய்தார்.
அடுத்ததாக பேசிய மூத்த உறுப்பினர் E.தாஜுதீன் அவர்கள் வி.களத்தூர் மக்களின் கடந்தகாலதில் கத்தாளை இளைப்பது போன்ற நிகழ்வுகளுடன் தற்பொழுது அவர்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தையும் விளக்கினார். அத்துடன் வெளிநாட்டு வாழ்க்கைப்பற்றியும், படிக்காததால் தான் அடைந்த தோல்விகளையும் விளக்கியதோடு தனது விடா முயற்சியால் தொலைதூரக்கல்வியின் மூலம் படித்து பட்டம் வாங்கி பதவி உயற்வு அடைந்ததையும் கூறினார். அத்துடன் அனைவரும் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தையும் விரிவாக விளக்கினார். இன்றை பொருளாதார விலையேற்றத்திற்கு வட்டிமுறை வியாபாரமே காரணம் என்றும் அத்தகைய வட்டி ஒழிப்பு முயற்ச்சியை தொடர்ந்து கடந்த பத்து வருடமாக செயல்படுத்திவரும் ஐஎம்சிடியை வெகுவாக பாராட்டி நிறைவு செய்தார்.
அடுத்ததாக பேசிய மூத்த உறுப்பினர் N.P.அலிராஜா அவர்கள் துபையில் நமதூர் மக்கள் எப்படி வட்டியில் திழைத்து இருந்தார்கள் என்றும் இன்று அல்லாஹ்வின் கிருபையால் ஐஎம்சிடியின் தொடர் முயற்சியால் வட்டி முழுவதுமாக ஒழிக்கப்பட்டது என்று கூறினார். மேலும் ஐஎம்சிடியின் நிறை குறைகளை இதுபோன்ற பொதுக்குழுவிலோ அல்லது நிர்வாகிகளிடமோ கண்டிப்பாக கூறினால்தான் நிர்வாகம் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும் என்று கூறினார். அத்துடன் ஏழை மாணவர்கள் கல்வி பயில ஐஎம்சிடி தொடரந்து உதவ வேண்டும் என்றும் தானும் அதில் அதிகம் பங்காற்ற விரும்புகிறேன் என்றார். மேலும் நமது மாணவர்கள் யாரும் சார்ட்டட் அக்கவுன்டன் (Charted Accountant) படிப்பதில்லை என்றும் அவ்வாறு படிக்க விரும்புபம் ஏழை மாணவர்களுக்கு பொருளாதார உதவி செய்யத்தயார் என்றும் கூறினார். மேலும் நாம் அனைவரும் கண்டிப்பாக தொழுகையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மதுவிற்கு யாரும் அடிமையாக வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் நிறைவு செய்தார்.
ஐஎம்சிடியின் பொருப்பாளர்கள் அனைவருக்கும் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய பொருப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. பொதுக்குழுவின் முழு ஆதரவுடன் கீழ்க்காணும் பொருப்பாளர் அடுத்த இரண்டு அண்டுகளுக்கு பதவியில் தொடருவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
பொதுச்செயலாளர்: B.அஹமது அலி
தலைவர்: F.சவுக்கத் அலி
துணைத்தலைவர்:அபு (எ) S.அக்பர் பாஷா
செயலளார்: M.தாஜுதீன்
துணைச்செயலாளர்: G.அப்துல் ரஹீம்
பொருளாளார்: A.ஜாஹிர் ஹுசேன்
இதுதவிர வட்டியில்லாக்கடன் குழுவில் H.ஹசேன் முஹம்மது அவர்களின் தலைமையில் அபு (எ) S.அக்பர் பாஷா மற்றும் F.சாகுல் ஹமீது ஆகியோர் தொடருவாரகள் என்றும் அறிவிக்கப்பட்டது. தணிக்கைக்குழுவில் லப்பைக்குடிக்காட்டை சேர்ந்த M.முஹம்மது நாசர் அவர்களும் புதிதாக தேர்வு செய்யப்பட்டார்.
கடன்வேண்டி விண்ணப்பிப்பவர்கள் பிரதிமாதம் 1ம் தேதியிலிருந்து 5ம் தேதிவரை மட்டும் கீழ்க்காணும் பொருப்பாளர்களிடம் பதிவு செய்யவேண்டும் என்று அறிவுருத்தப்பட்டது.
1. M.தாஜுதீன் (050-5894146)
2. F.சாகுல் ஹமீது (050-9365131)
அடுத்ததாக கடந்த சில வருடங்களாக செயல்படாமல் இருந்த ஐஎம்சிடியின் வியாபர குழுமறுநிர்ணயம் செய்யப்பட்டு புதிய பொருப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விபரம் வருமாரு,
தலைவர்: B.அஹமது அலி
செயல்வீரர்கள்: B.அப்துல் காதர், F.சவுக்கத் அலி, A.ஆதம் சரீப் மற்றும் K.முஹம்மது பாருக்.
ஆலோசகர்கள்: N.P.அலி ராஜா மற்றும் E.தாஜுதீன்
இந்த வியாபார குழுவினர் அடுத்த ஆறு மாதத்திற்குள் தாங்கள் ஆரம்பிக்க இருக்கும் வியாபாரம் குறித்த முழு விபரத்தையும் அறிக்கையாக தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் ஐஎம்சிடியில் பனியாற்றிய பொருப்பாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. நினைவு பரிசை வாங்காத உறுப்பினர்கள் அடுத்துவரும் கூட்டத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இருதியாக துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது, வந்திருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவில் 75ற்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர், இரவு 10 மணி அளவில் விழா நிறைவபெற்றது.
நன்றி : கல்லாறு.காம்
துபாயில் நடைபெற்ற ஐஎம்சிடியின் பத்தாம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:12:00
Rating:
No comments: