ஊராட்சிகளில் நாளை மகிளா சபை சிறப்பு கூட்டம்
பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சிப் பகுதியிலும் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்களால் நாளை (12ம் தேதி) மகிளா சபை சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மகளிர் நலத் திட்டங்களின் விவர த்தை தெரிவிக்க வேண்டும்.
மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், பெண்கள் ஆகியோர் தாங்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் நடைபெறும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும், இக்கூட்டம் சிறப்பாக நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவ லர் மூலம் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டாரம் வாரியாக, மண்டல அலுவலர்கள் மகிளா சபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த மகிளா சபை சிறப்பு கூட்டத்தில் மகளிர் மட்டுமே பெருந்திரளாகக் கலந்துகொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்திட மிகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தகவல் தெரிவித்துள்ளார்.

Reviewed by நமதூர் செய்திகள்
on
20:13:00
Rating:
No comments: