மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பெரம்பலூர் கலெக்டர்- எம்.எல்.ஏ. வழங்கினர்
மாற்றுத்திறனாளிகள் 39 பேருக்கு நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது, இரா.தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ. வழங்கினர்.
மூன்று சக்கர சைக்கிள்கள்
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார் .
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தரேஸ் அஹமது பேசிய தாவது:-
பயன்படுத்தி கொள்ள வேண்டும்
தமிழக முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல் படுத்தி வருகிறார். அந்த வகை யில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து மாற்றுத்திறனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 39 நபர்களுக்கு மூன்று சக்கர வண்டி, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் ஊன்று கோல் வழங்கும் திட் டங்களின் கீழ் ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 785 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகிறது.
இது போன்ற நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண் டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். கலெக்டர்-எம்.எல்.ஏ.
அதனை தொடர்ந்து 4 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 960 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களையும், 16 நபர்களுக்கு ரூ.78 ஆயிரத்து 560 மதிப்பிலான மூன்று சக்கர வண்டிகளையும், 7 நபர்களுக்கு ரூ.31 ஆயிரத்து 325 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளையும், 12 நபர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 940 மதிப்பிலான ஊன்று கோல்களையும் ஆக மொத்தம் 39 பேருக்கு ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 785 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக் டர் மற்றும் தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கி னர்.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பெரம்பலூர் கலெக்டர்- எம்.எல்.ஏ. வழங்கினர்
Reviewed by நமதூர் செய்திகள்
on
19:34:00
Rating:
No comments: