மாவட்ட அளவில் ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டிகள்
மாவட்ட அளவில் ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட அளவில் ஆண்களுக்கான ஹாக்கி லீக் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்ட அளவிலான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் வளைகோல் பந்து சங்கங்களில் உள்ள அணிகள் போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில், தங்களது அணிகளை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் பிப். 5 காலை 7 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஹாக்கி போட்டிகள், தொடர் போட்டிகள் முறையில் நடத்தப்பட உள்ளது.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் முதல் இரண்டு அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதில், அதிக புள்ளிகள் எடுத்து வெற்றி பெறும் அணி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய வட்டங்களுக்கிடையேயான மண்டல அளவிலான ஹாக்கி லீக் சாம்பியன் ஷிப் போட்டிகளில் கலந்துகொள்வர்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் பி. சைமன்ராஜை 9500074838 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மாவட்ட அளவில் ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டிகள்
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:12:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:12:00
Rating:

No comments: