ஆதாரம் இல்லை:பொடா சட்டத்தில் கைதான 3 முஸ்லிம்கள் விடுதலை!



ஆதாரம் இல்லை:பொடா சட்டத்தில் கைதான 3 முஸ்லிம்கள் விடுதலை!

புதுடெல்லி: ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்தினார்கள் என்று குற்றம் சாட்டி பொடா கறுப்புச் சட்டத்தின் கீழ் கைதுச்செய்யப்பட்ட 3 முஸ்லிம்களை ஆதாரம் இல்லாததால் உ.பி மாநிலத்தின் மொராதாபாத் நீதிமன்றம் விடுதலைச்செய்தது. 2002-ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்ட மக்ஸூத், ஜாவேத், தாஜ் முஹம்மது ஆகிய 3 பேர் விடுதலைச் செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இவர்களுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற ஏற்கனவே உ.பி அரசு முடிவுச் செய்திருந்தது.ஆனால், அலகபாத் நீதிமன்றம் பெஞ்ச் மறுத்துவிட்டது. பொடா சட்ட நடவடிக்கைகளை போலீஸ் கடைப்பிடிக்கவில்லை என்று ஜாவேதின் வழக்குரைஞர் ஜலாலுதீன் வாதிட்டார். எஸ்.பி ரேங்கில் உள்ள போலீஸ் அதிகாரிகள் தாம் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெறவேண்டும் என்று பொடா சட்டம் கூறுகிறது.
ஆனால், இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்டவர்களிடம் போலீஸ் எஸ்.ஐ வாக்கு மூலம் பதிவுச் செய்துள்ளார்.குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை ஆஜர் படுத்துவதில் அரசு தரப்பு தோல்வியடைந்துவிட்டது என்று ஜலாலுதீன் தெரிவித்தார். தீவிரவாத எதிர்ப்புச் சட்டமான பொடா, இந்திய தண்டனைச் சட்டத்தில் தேசத்திற்கு எதிராக போர்ச் செய்தல் ஆகிய பிரிவுகளில் 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
http://www.thoothuonline.com
ஆதாரம் இல்லை:பொடா சட்டத்தில் கைதான 3 முஸ்லிம்கள் விடுதலை! ஆதாரம் இல்லை:பொடா சட்டத்தில் கைதான 3 முஸ்லிம்கள் விடுதலை! Reviewed by நமதூர் செய்திகள் on 03:46:00 Rating: 5

No comments:

Powered by Blogger.