பெண்களுக்கான இலவச எம்பிராய்டரி, ஆடைகளில் அச்சுக் கலைப் பயிற்சி
பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பெண்களுக்கான இலவச எம்பிராய்டரி மற்றும் ஆடைகளின் அச்சுக்கலைப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பிப். 10-ம் தேதி முதல் எம்பிராய்டரி மற்றும் ஆடைகளில் அச்சுக்கலைப் பயிற்சி பெண்களுக்கு மட்டும் இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற 18-40 வயதிற்குள், 8-ம் வகுப்பு படித்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.
பயிற்சி காலை 10 - மாலை 5.30 மணி வரை 15 நாட்கள் நடைபெறும். பயிற்சி காலத்தில் மதிய உணவும், பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள ஐ.ஓ.பி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-277896 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
பெண்களுக்கான இலவச எம்பிராய்டரி, ஆடைகளில் அச்சுக் கலைப் பயிற்சி
Reviewed by நமதூர் செய்திகள்
on
19:47:00
Rating:
No comments: