புனித ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க மனு
காரைக்கால்: புதுச்சேரியிலிருந்து புனித ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும், வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில ஹஜ் கமிட்டி தலைவர் எம்.எல்.ஏ நாஜிமிடம் இஸ்லாமியர்கள் மனு வழங்கினர்.
காரைக்கால் காஜியார் வீதி ஆஷுரா பள்ளியில் ஜாமிஅத்துல் ஹூஜ்ஜாஜ் சார்பில் புனித ஹஜ் அலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட ரீஜினல் காஜியார் பஷிர் மரைக்காயர் தலைமை வகித்தார். அபூபக்கர் அனைவரையும் வரவேற்றார். பேராசிரியர் லியாகத்அலி, முஹம்மது ஆரிப், ஹாஜா நஜ்முதின் புனித ஹஜ் பயணம் குறித்து தங்களது ஆலோசானைகளை வழங்கினர். பின்னர், புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டி புதிய உறுப்பினராக ஹாஜா ஹாலிது மரைக்காயரை நியமித்தற்கான உத்தரவினை வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட மாநில ஹஜ் கமிட்டி தலைவர் நாஜிமிடம், புதுச்சேரியிலிருந்து புனித ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும், புனித ஹஜ் பயணம் செல்ல வாய்பை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இஸ்லாமியர்கள் மனு வழங்கினர். மனுவை பெற்றுகொண்ட நாஜிம், அதற்கான நடவடிக்கையை எடுப்பதாக உறுதி அளித்தார்.
புனித ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க மனு
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:04:00
Rating:
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:04:00
Rating:

No comments: