மதுரையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி படுகொலை!


மதுரையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி படுகொலை!


தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி மதுரையைச் சார்ந்த மன்னர் மைதீன் நேற்று காலையில் சரமாரியாக குத்திக் கொலைச் செய்யப்பட்டார்.
மதுரை நெல்பேட்டை கரீம்ஷாபள்ளிவாசல் 4–வது தெருவை சேர்ந்தவர் அப்துல்அஜீஸ். இவருடைய மகன் மன்னர் மைதீன் (வயது 35). இவர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட தலைவராக பதவி வகித்து, தற்போது மாநில இளைஞரணி துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். அத்துடன், ரியல் எஸ்டேட் தொழிலும், ஆடுகளை விற்றுக் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.
கடந்த 2005–ம் ஆண்டு கங்காதரன் என்ற பூசாரியும், இந்து அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரும் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட மன்னர் மைதீன் விடுதலை ஆகிவிட்டார்.
நேற்று காலை 11.30 மணிக்கு மன்னார் மைதீன், முனிச்சாலை ஓபுளாபடித்துறை அருகில் உள்ள பழைய பேப்பர் கடையில் நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் வந்தனர். அவர்கள் ஒருவன் திடீரென்று வண்டியை விட்டு இறங்கி மன்னர் மைதீனின் கைகளை பிடித்து கொண்டான். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கையில் கத்தியால் மன்னர் மைதீனின் நெஞ்சு, வயிறு, கழுத்து என சரமாரியாக குத்திவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.
மன்னர் மைதீனின் குடல் சரிந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மன்னர் மைதீன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் சமந்தரோகன் ராஜேந்திரா, உதவி கமிஷனர் துரைச்சாமி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மன்னர் மைதீன் கொலையைத் தொடர்ந்து, பெரிய ஆஸ்பத்திரி, நெல்பேட்டை பகுதிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காதவாறு தடுக்க, போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக விளக்குத்தூண் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட மன்னர் மைதீனுக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் மன்னர் மைதீனின் முன்னாள் கூட்டாளி இப்ராஹீம் ஷா முன்விரோதம் காரணமாக மைதீனை கொலைச் செய்திருக்கலாம் என்று கூறி அவர் உள்பட 3 பேரை தேடிவருவதாக போலீஸ் கூறுகிறது.
பூசாரி கங்காதரன், காளிதாஸ் கொலை வழக்குகளில் மன்னர் மைதீன் கைதாகி விடுதலையானவர். எனவே இந்துத்துவா அமைப்புகளுக்கு இக்கொலை வழக்கில் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், போலீஸ் அந்த கோணத்தில் விசாரணையை நடத்தாமல் இப்ராஹீம் ஷா மீது பழியைப் போட்டு அவரை தேடி வருவதால் இவ்வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மதுரையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி படுகொலை! மதுரையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி படுகொலை! Reviewed by நமதூர் செய்திகள் on 23:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.