பெரம்பலூரில் ரூ. 33.60 லட்சத்தில் டிஜிட்டல் வழிகாட்டி தகவல் பலகை!டிரைவர்கள் மகிழ்ச்சி!


பெரம்பலூரில் புறவழிச் சாலை பணிகள் முழுமையாக நிறைவுபெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, சாலைகளை அடையாளம் காணும் வகையில் டிஜிட்டல் பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் நகராட்சிக்கான புறவழிச்சாலை முதல்கட்டமாக திருச்சி& சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெரம்பலூர் ஆத்தூர் சாலை கோனேரிப்பாளையம்வரை ரூ.12 கோடியில் அமைக்கப்பட்டு பயன் பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
2ம் கட்ட சாலை ஆத்தூர் சாலை கோனேரிப்பாளையம் தொடங்கி, பெரம்பலூர்& துறையூர் சாலையில் செஞ்சேரி வரை ரூ.11 கோடியில் அமைக்கப்பட்டு டிசம்பர் மாதம் முதல் போக்குவரத்துக்காகத் திறந்துவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செஞ்சேரி, கோனேரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைகளை இணைக்கும் புறவழிச் சாலை ஓரங்களில் சாலை யோர தடுப்புகள், வடிகால்கள் அமைத்தல், சாலைகளின் நடுவே இர வில் ஒளிரக்கூடிய ரிப்லெக்டர் பதித்தல், சாலை நடுவே சென்டர் மீடியன் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து சாலைகளை அடையாளங்காணும் வகையில் நவீன டிஜிட்டல் பெயர்ப் பலகைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு தற்போது முடிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் ரூ. 33.60 லட்சத்தில் டிஜிட்டல் வழிகாட்டி தகவல் பலகை!டிரைவர்கள் மகிழ்ச்சி! பெரம்பலூரில் ரூ. 33.60 லட்சத்தில் டிஜிட்டல் வழிகாட்டி தகவல் பலகை!டிரைவர்கள் மகிழ்ச்சி! Reviewed by நமதூர் செய்திகள் on 01:39:00 Rating: 5

No comments:

Powered by Blogger.