என்றும் கல்விச் சேவையில் முஸ்லிம்கள்!

இஸ்லாத்தில் கல்வி என்பது மார்க்கக் கல்வி மட்டும் அல்ல, மார்க்கக் கல்வியுடன் சேர்ந்த உலகக் கல்வியும் தான். இஸ்லாத்தில் கல்வி கற்க எவன்
நடக்கிறானோ அவனுடைய பாதையில் அல்லாஹ் உதவி அளிக்கிறான்.
கல்வியைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சீன தேசம் சென்றாலும் கல்வி கற்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அப்படிப்பட்ட கல்வியைக் கற்பது கடமை.  கல்வியுடையவனும் கல்வி கற்காதவனும் எப்பொழுதும் சமமாக மாட்டார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.
ஆகையால்தான் நபி (ஸல்) அவர்களுக்கும் முதலில் “ஓதுவீராக” என்று ஜிப்ரஈல் (அலை) அவர்கள் கூறினார்கள். பின் படிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். அப்படிப்பட்ட கல்வியைக் கற்க உதவி செய்வது அதிக நன்மையைத் தரும்.
நாம் இறந்த பின்னும் நமக்கு நன்மையை ஈட்டித் தரும் செயலில் குர்ஆன் ஓத உதவுவதும் ஒன்று.  நாம் வாழும் இந்த இந்திய நாடு உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்நாட்டில் மக்கள் அனைவருக்கும் கல்வி கற்க உழைத்த பலரில் முஸ்லிம்களும் உண்டு.
ஆனால் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. வரலாறில் கல்விகாக உதவிய நபர்கள் என்று நம்மிடம் கேட்டால் நாம் காமராஜ், எம்.ஜி.ஆர். என்று கூறுவோம். ஆனால் இவர்களை விட அதிக சேவை புரிந்த நபர்தான் மௌலானா அபுல் கலாம் ஆசாத்.
1888 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் நாள் மக்காவில் அவர் பிறந்தார். இவருடைய தந்தை மௌலானா ஃகைருதீன். அபுல் கலாம் ஆசாத் அவர்கள் பல மொழிகளைக் கற்ற வித்தகர். சிறு வயதில், அதாவது 16 வயதில் மூன்று பத்திரிகைகளின் ஆசிரியராக பணியாற்றினார்.
இவருடைய கல்விச் சேவைகளில் முக்கியமான சிலவற்றை கீழே பார்ப்போம். உலகப் புகழ் பெற்ற இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (IIT) நிறுவியவர். இந்திய அறிவியல் நிறுவனத்திற்கு (IISC) வித்திட்டவர். பல்கலைக்கழக மானியக் குழுவை (UGC) உருவாக்கியவர்.
அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி வழங்க ஆசைப்பட்டவர். கல்வி உரிமைச் சட்டத்தின் துவக்கப் புள்ளி. இவர்தான் இந்திய நாட்டின் முதல் கல்வி அமைச்சர். இவருடைய பிறந்தநாள் (11.11.1888) தேசிய கல்வி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது.
அபுல் கலாம் ஆசாத் கடந்த காலத்தின் கல்விச் சேவை நாயகன். நிகழ்கால நாயகனாக திகழும் நபர்தான் அசீம் பிரேம்ஜி. இவர்தான் WIPRO என்ற தொழில் நிறுவனத்தின் தலைவர். இவர் 1945 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் நாள் பிறந்தார்.
இவர் பணம் சம்பாதிக்க மட்டும் ஆசைப்படவில்லை. அதை நல்ல விதத்திலும் செலவிட எண்ணம் கொண்டவர். இவர் இந்தியாவில் 3 ஆம் நிலை பணக்காரரும் உலகில் 91 ஆம் நிலை பணக்காரரும் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு 2013 வரை 17.2 பில்லியன் டாலர்.
ஆனால் இவர் 2 பில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் கல்விக்காக பயன்படுத்த முடிவு எடுத்துள்ளார். அதன் முயற்சியாக இந்தியா முழுவதும் கல்வித் தரத்தை உயர்த்த பல கல்வி நிலையங்களை நிறுவி இலவசமாக நடத்துகிறார்.
குறிப்பாக நாட்டுப்புறப் பள்ளிகளிலான பொதுக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் பல ஆண்டுகளாக ஒரு கருவியாக இருந்து வருகிறார். இவர் செய்யும் சேவையை மக்களுக்கு சேவை செய்வோம் என்று உறுதி அளித்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை. பள்ளி, கல்லூரியை நடத்தும் அரசியல்வாதிகள் அதிகம் பணம் வசூலிக்கின்றார்கள்.
இப்படி பல சேவைகள் செய்தும் முஸ்லிம்கள் இந்நாட்டில் தீவிரவாதிகளாகவும், அன்னியர்களாகவும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இந்நிலை மாற முஸ்லிம்கள் கடினமாக உழைத்து சாதித்த பிறகு மற்றவர்களுக்கும் உதவ வேண்டும்.
ஆரூர் யூசுஃப்தீன்
என்றும் கல்விச் சேவையில் முஸ்லிம்கள்! என்றும் கல்விச் சேவையில் முஸ்லிம்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 20:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.