மம்தா பானர்ஜி தலைக்கு ரூ 11 லட்சம் சன்மானம்: பாஜக தலைவர் மிரட்டல்!
கொல்கத்தா(12 ஏப் 2017): மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலையை கொய்து வந்தால் ரூ 11 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று மேற்கு வஙக பாஜக இளைஞர் அணி தலைவர் யோகேஷ் வர்ஷினி மிரட்டல் விடுத்துள்ளார்.
கல்கத்தாவில் ஞாயிறன்று பாஜக நடத்திய ஹனுமான் பேரணியில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டதால், காவல்துறை தடியடி நடத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க எம்பியும் மேற்கு வங்க பா.ஜ.க இளைஞர் அணி தலைவருமான யோகேஷ் வர்ஷினி மம்தா பானர்ஜி தலைக்கு 11 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளார்.
முன்னதாக பேரணி மதரஸா சாலையில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மம்தா பானர்ஜி தலைக்கு ரூ 11 லட்சம் சன்மானம்: பாஜக தலைவர் மிரட்டல்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:29:00
Rating:
No comments: