உலகின் அதிக எடை கொண்டவரின் எடையை குறைத்து இந்திய மருத்துவர் சாதனை!
மும்பை(12 ஏப் 2017): உலகின் அதிக எடை கொண்ட எகிப்திய பெண்ணின் பகுதி எடையை குறைத்து மும்பை மருத்துவர் சாதனை படைத்துள்ளார்.
ஈமான் அஹமது அப்துல் இவர் 500 கிலோ எடையுடன் பெரிதும் அவதியுற்றார். இதற்காக மருத்துவம் பெற கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி மும்பை வந்தார். அவருக்கு டாக்டர் முஃபஜ்ஜல் லக்தாவாலா அவர்களால் கொடுக்கப் பட்ட அறிவுறுத்தல் மற்றும் உணவு மாற்றங்கள் பிசியோதரப்பி உள்ளிட்ட சிகிச்சை முறையினால் தற்போது 242 கிலோ எடை குறைக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து ஆச்சர்யப்பட்டுள்ள இமான், "நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். சுமார் 20 வருடமாக உடல் எடை அதிகரிப்பால் மிகவும அவதியுற்றேன். தற்ப்போது இது மிகவும் ஆச்சர்யத்தை அளிக்கிறது." என்றார்.
அதிக எடையுடன் அவதியுற்றா ஈமான், இதய நோய், கிட்னி மற்றும் ஸ்ட்ரோக்,உள்ளிட்ட பிரச்சனைகளால அவதியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் அதிக எடை கொண்டவரின் எடையை குறைத்து இந்திய மருத்துவர் சாதனை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:28:00
Rating:
No comments: