கட்டாயமாக்கப்பட்ட இந்தி மொழி!
கடந்த 2011ஆம் ஆண்டு, அதிகாரபூர்வ மொழிக்கான பாராளுமன்றக் குழு, தனது 9வது அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அறிக்கையில் உள்ள பெரும்பாலான பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், இந்த பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து, மாநில அரசுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ‘இந்தியை கட்டாயமாக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும். முதற்கட்டமாக, சி.பி.எஸ்.இ. மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை பாடத் திட்டத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளார்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், கடந்த ஆண்டு மும்மொழி பாடத் திட்டத்தை 10ஆம் வகுப்பு வரை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது. எனினும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இன்னும் முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டாயமாக்கப்பட்ட இந்தி மொழி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:52:00
Rating:
No comments: