மோடியின் ட்விட்டும் அவரின் நிஜ முகமும்!
பிரதமர் மோடி ஏப்ரல் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவின் விவசாயிகள் தேசத்தின் பெருமையாக இருக்கிறார்கள். விவசாயிகள் தங்கள் கடின உழைப்பால் மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளிக்கிறார்கள். அவர்களுடைய நலனுக்காக சாத்தியமான அனைத்தையும் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்” என்று ட்விட் செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த ட்விட் தமிழக நெட்டிசன்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வறட்சி நிவாரணம் கூடுதலாக வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 37வது நாட்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், தமிழக விவசாயிகள் பிரதமர் மோடி எங்களைச் சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை ஏற்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் மோடியின் கவனத்தைப் பெறுவதற்காக தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளை மாலையாக அணிதல், பிச்சை எடுத்தல், பாதி மீசை மற்றும் தலை மழித்தல், தலை கீழாக நிற்பது, உச்ச பட்சமாக நிர்வாணப் போராட்டம் என்று பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்து வருகிறார். இந்நிலையில், மோடியின் இந்த ட்விட் எவ்வளவு போலியானது என்பது வெளிப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
மோடியின் ட்விட்டும் அவரின் நிஜ முகமும்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:54:00
Rating:
No comments: