ஆபாச சி.டி.யில் சிக்கிய முன்னாள் அமைச்சர் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரச்சாரம்!
புதுடெல்லி(17 ஏப் 2017):ஆபாச சி.டியில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய ஆம் ஆத்மி முன்னாள் டெல்லி அமைச்சர் சந்தீப் குமார் டெல்லி நகராட்சி தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லி குழந்தைகள் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் சந்தீப் குமார் குறித்த ஆபாச சிடி ஒன்று கடந்த வருடம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சிடியில் அமைச்சர், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளும், புகைப்படங்களும் இருந்தது. ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் இந்த வீடியோ வெளியானது. இதனை அடுத்து அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இப்போது டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து சந்தீப் குமார் பிரசாரம் செய்கிறார். நாரேலா பகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சவிதா காத்ரிக்கு ஆதரவாக சந்தீப் குமார் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
ஆபாச சி.டி.யில் சிக்கிய முன்னாள் அமைச்சர் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரச்சாரம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:20:00
Rating:
No comments: