மத விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடலாமா? : பேராசிரியர் முஃப்தி சாஹித் அலி கான்!

மத விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடலாமா? : பேராசிரியர் முஃப்தி சாஹித் அலி கான்!
புதுடெல்லி(22 ஏப் 2017): முத்தலாக் உள்ளிட்ட மத விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது ஒருதலை பட்சமானது என்று சன்னி இறையியலின் துணை பேராசிரியர் முஃப்தி சாஹித் அலி கான் தெரிவித்துள்ளார்.
முத்தலாக் விவகாரத்தை மத்திய அரசும், ஊடகங்களும் பெரிதுபடுத்தி விவாதிப்பதோடு, முத்தலாக்கிற்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தையும் நாடியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து சன்னி இறையியலின் துணை பேராசிரியர் முஃப்தி சாஹித் அலி கான், கருத்து தெரிவிக்கையில், "முத்தலாக்  உள்ளிட்ட விவகாரங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூற முடியாது. ஏனென்றால் ஜெயின் சமுதாக சடங்குகளில் ஒன்றான சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்றம் மக்களின் வழிபாட்டு உரிமைகளில் தலையிட முடியாது என்றும், அவர்களின் வழிபாட்டு முறையை கடைபிடிக்க ஜெயின் சமூகம் உரிமையுடையவர்கள் என்று கூறி அனுமதித்தது. ஆனால் முஸ்லிம்களை பொறுத்தவரை அவர்களின் வழிபாட்டு முறை உச்ச நீதிமன்றம் தலையிடலாமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல விவாகரத்து சதவீதத்தில் முஸ்லிம்களை பொறுத்தவரை மற்ற மதத்தினரை விட மிகக்குறைவு என்றும் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியான ஆய்வு ஒன்று கூறுகிறது. அதாவது முஸ்லிம் மதத்தில் 0.56 சதவீதமும் அதேவேளை இந்து சமயத்தில் 0.76 சதவீதம் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
அதேபோல இந்தியாவில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டுள்ள போதும், 1.2 கோடி சிறுவர்கள் தங்களின் 10 வயதிற்குள்ளேயே திருமணம் முடித்து வைக்கப்படுகின்றனர். இதில் 84% குழந்தை திருமணங்கள் இந்து சமூகத்திலேயே நடைபெறுவது. ஆனால் இது குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை ஆனால் பிற மத வழிபாடு விவகாரங்களில் மட்டுமே அக்கறை காட்டுகின்றன என்ற கேள்வியும் நடுநிலையளர்களிடையே எழுந்துள்ளது.
மத விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடலாமா? : பேராசிரியர் முஃப்தி சாஹித் அலி கான்! மத விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடலாமா? : பேராசிரியர் முஃப்தி சாஹித் அலி கான்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:26:00 Rating: 5

No comments:

Powered by Blogger.